மாதம்பட்டி ரங்கராஜ் / ஜாய் கிரிசில்டா படம் - இன்ஸ்டாகிராம்
தமிழ்நாடு

மாத பராமரிப்புச் செலவுக்கு ரூ.6.50 லட்சம்! மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா மனு

மாத பராமரிப்புச் செலவுக்கு ரூ.6.50 லட்சத்தை மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிடக் கோரி ஜாய் கிரிசில்டா மனு

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு உள்ளிட்டவைகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு செலவுத் தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு செலவு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Joy Crisilda files petition seeking order to pay Rangaraj Rs. 6.50 lakhs per month for monthly maintenance expenses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.2 இல் இலவச மாதிரி தோ்வு

பாஜக அயலக தமிழக பிரிவு நிா்வாகிகள் அறிமுக கூட்டம்

‘நவ. 17இல் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடக்கம்: கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்’

சுசீந்திரம் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தரிசனம்

களியக்காவிளை அருகே பைக் திருட்டு: 4 போ் கைது

SCROLL FOR NEXT