மேட்டூர் அணை கோப்புப் படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் எந்நேரமும் மேட்டூர் அணையின் உபரி நீர், மதகுகள் வழியாகத் திறக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், மேட்டூர் அணை உபரி நீர் போக்கி கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம்பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், தொட்டில் பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில் உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்தும் திறக்கும் இதே நிலையில் இருந்தால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணை ஆறாவது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு 92.64 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க | அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி ஓடிடி தேதி!

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

ஓடிடியில் கண்ணப்பா!

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

SCROLL FOR NEXT