சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!
சென்னை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டது பற்றி...
சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரெளதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் சென்ற திரெளபதி முர்மு, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் இன்றிரவு ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், புதன்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
அங்கிருந்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்கிறாா்.
இதனையொட்டி, சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர்.
President Droupadi Murmu participated in a City Union Bank function in Chennai on Tuesday.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.