முகப்பு
தமிழ்நாடு

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

இருசக்கர வாகனம் தீப்பற்றி புகைமூட்டம்.. ஆத்திரமடைந்த இளைஞர் தேங்காய் உடைத்து வழிபாடு...

Updated On : 4 செப்டம்பர், 2025 at 11:53 AM
தேங்காய் உடைத்து வழிபட்ட இளைஞர்
பகிர்:

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிப் புகைந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தேங்காய் உடைத்து வழிபட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் பழுந்தடைந்து புகைமூட்டமாகப் புகைந்தது.

அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் நிறுத்திவிட்டு ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஏற்கெனவே வீட்டு விஷேசத்துக்கு வாங்கி வைத்திருந்த பூமாலையைப் போட்டு, தேங்காய் உடைத்து ஆத்திரத்தில் சுவாமி கும்பிட்ட செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

summary

The incident of a young man breaking a coconut and worshipping it in anger after a two-wheeler suddenly caught fire and started smoking caused a huge stir there.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.