நான் பிரதீப் ஜான் கிடையாது, செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா எனறு கணித்துச் சொல்வதற்கு என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செங்கோட்டையன் முயற்சி நல்ல முயற்சி, வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.
மேலும், அதிமுகவில் 1972 முதல் கட்சியில் இருக்கிறார். தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்தவர். ஆக்டிவாக இருக்கும் எம்எல்ஏவில் செங்கோட்டையன் மூத்தவர். அவர் முயற்சி வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன். முயற்சி வெற்றி பெறுமா என்று கேட்டால், முன் கணித்துச் சொல்ல நான் ஒன்றும் பிரதீப் ஜான் கிடையாது.
செங்கோட்டையன் கெடு விதித்திருக்கும் நிலையில் இப்போதும் மௌனம் காத்தால் நாங்கள் பொறுப்பல்ல, அதிமுக தொண்டர்களின் மனக்குமுறலைத்தான் செங்கோட்டையன் வெளிப்படுத்தினார் என்று டிடிவி தினகரன் பதிலளித்தார்.
மதுரையில் டிடிவி தினகரன் இவ்வாறு பேசியிருந்த நிலையில், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கி, கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் ஆகிய ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சிப் பொறுப்புகளையும் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.