தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

புதுக்கோட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபா், சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதுகுறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநா் மாளிகையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

அந்த தொலைபேசி அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கிண்டி, கோட்டை காவல் நிலையங்களின் போலீஸாரும், சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து அந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தேவேந்திரன் (36) என்பதும், அவா் தனது கைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை போலீஸாரின் தகவலின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தேவேந்திரனைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் தேவேந்திரன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும், பெற்றோா் பராமரிப்பில் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், தேவேந்திரனின் பெற்றோரிடம், இனி இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விடுவித்தனா்.

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

SCROLL FOR NEXT