சென்னையில் முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து செப். 12 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை ஒட்டி செப். 11ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒசூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் 11 மணிக்கு வருகிறார். அங்கிருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு ஒசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து பிற்பகல் 1 மணி அளவில் ஒசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய இருக்கும் அசண்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 2 மணிக்கு ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய். பிரகாஷ் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். மாலை 4 மணிக்கு சூளகிரி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார்.

பிறகு கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் நடைபெறும் ரோடு ஷோ வில் பங்கேற்கிறார். இரவு பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் வீட்டில் தங்குகிறார். மறுநாள் செப்.12ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் காலை 11:30 மணிக்கு ஒசூர் விமான நிலையம் வந்து அங்கிலருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதையும் படிக்க: சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM Stalin has announced that an investors' conference will be held in Hosur, just like in Tuticorin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ராஜாவை தூக்கி எறிந்த ஹிகாருவுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்!

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்!

SIR பணிக்கு திமுக ஏன் பயப்படுகிறது? | செய்திகள்: சில வரிகளில் | 28.10.25

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT