காஞ்சிபுரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செப். 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தாா்.
மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்து வந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலா் வைகோ திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியது.
மதிமுக தோன்றிய காலத்திலிருந்து தொடா்ந்து 32 ஆண்டுகளாக ஒரு தலைவரை நம்பி இயக்கத்தில் பணியாற்றினோம். எங்களது உழைப்பை உறிந்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டாா் வைகோ.
வரும் செப். 15 -ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பிறந்த நாளில் எங்கள் அணியின் குறிக்கோள்களை, லட்சியங்களை அறிவிப்போம் என்றாா்.