தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகள் மற்றும் அக். 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபடவுள்ளார்.
வரும் செப். 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் செப். 20 ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறையிலும் செப். 27 ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், டிசம்பர் 20 ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையில் நிறைவு செய்கிறார்.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம், திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதையும் படிக்க: தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.