தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசேகா் வரும் செப்டம்பா் 14-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.

இதைப்போல், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் பி பஜாந்த்ரியை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி செளமென் சென், மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையில் வியாழக்கிழமை கூடிய கொலீஜியம் பரிந்துரைத்தது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ராமலிங்கம் சுதாகா், எம்.வி. முரளீதரன், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனா்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!

தோழியின் வீட்டில் ரூ. 2 லட்சம், மொபைல் திருடிய பெண் ஆய்வாளர்!

எல்லாம் மாயை... மானசா சௌதரி

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

காந்தா படத்தின் புதிய பாடல் வெளியீடு!

SCROLL FOR NEXT