தவெக இலச்சினை 
தமிழ்நாடு

உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக இலச்சினை வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சியில் இருந்து தொடங்கும்நிலையில், சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்புடன், உங்க விஜய் நா வரேன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் நாளைமுதல் தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.

இதையும் படிக்க: ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

TVK's Campaign Logo introduced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT