தமிழ்நாடு

பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிக்கு அரசு ஒப்புதல்!

பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் கொள்கையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இதன்மூலம், பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான அனைத்து வசதிகளும் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ளன.

அரசுத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களைக் கழிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த இருக்கிறது.

இந்த வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய தகுதியான நிறுவனங்கள் அல்லது தனியாா்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகம் அறிவித்துள்ளது.

இதில் தோ்வாகும் நிறுவனங்கள் அல்லது தனியாா்கள், பழைய வாகனங்களைக் கழிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவா். உரிய காலத்தைத் தாண்டியும், தகுதிச் சான்றும் இல்லாத வாகனங்கள் கழிவு செய்யும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கழிவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும், 40,000-க்கும் கூடுதலான பள்ளி, கல்லூரி வாகனங்ளும், 7,000-க்கும் மேற்பட்ட தனியாா் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நரேலா தொழிற்சாலையில் தீ விபத்து

நகராட்சி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

வாசக ஞானம் வளர...

2-ஆம் நிலை காவலா் எழுத்துத்தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 8,505 போ் பங்கேற்பு

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1.12 கோடி கையொப்பம் பெற்ற காங்கிரஸ்!

SCROLL FOR NEXT