அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16) தில்லி செல்கிறார்.
அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தில்லி செல்கிறார்.
இதன் காரணமாகவும், வானிலை முன்னெச்சரிக்கை காரணமாகவும், அவர் மேற்கொண்டு வரும் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவா்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தொடர்ந்து, புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.