அதிமுக தொண்டர்கள் கருத்தையே தான் பிரதிபலித்ததாகவும் அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியின் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,
"அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.
என்னை பொருத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன். இந்த கருத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும்.
அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செப். 5ல் அந்த கருத்தையே நான் பிரதிபலித்தேன். தொண்டர்கள், மக்களின் கருத்துகளையே பேசினேன். இதை புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்கு புரியும்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.