எட்டாம் வகுப்பு தனித்தோ்வு முடிவுகள் புதன்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.
இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஆக.18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் தோ்வுத் துறை இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.
இதில் தோ்வா்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களை அறியலாம். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.