சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! 
தமிழ்நாடு

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழையில் மயிலாப்பூரில் 80 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் மயிலாப்பூரில் 80 மி.மீட்டர் மழை பதிவானது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், இன்று (செப்.16) முதல் செப்.21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய கனமழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால், மயிலாப்பூரில் 80 மிமீ, அயனாவரத்தில் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 60 மி.மீ மழையும் பதிவானது.

கனமழை காரணமாக சென்னையில் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கத்தாரின் தோகாவில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக துபை, லண்டன், ஷார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

chennai rain today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் EPS! | ADMK

தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

SCROLL FOR NEXT