குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்திப்பு ANI
தமிழ்நாடு

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்திப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளார். தில்லி சென்றடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால், இன்பதுரை ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி .வேலுமணி, கே. பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவிருக்கிறார்.

ADMK General secretary Edappadi Palaniswami meets Vice President C.P.Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT