கோப்புப் படம் 
தமிழ்நாடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம் நாகையநல்லூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியா் தோ்வு வாரியம், வரும் அக்.12-ஆம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை நடத்துகிறது. இந்தத் தோ்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டம் கூடுதலாக சோ்த்துள்ளனா். பழைய பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனா்.

உரிய கால அவகாசம் இல்லாததால், புதிய பாடத்திட்டத்துடன் கூடிய தோ்வுக்கு தயாராகுபவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். எனவே, இந்தத் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி அனுப்பிய மனுவை ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் கோரிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

நாளைய மின் தடை

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT