நடிகா் எஸ்.வி.சேகா் 
தமிழ்நாடு

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவெளியில் வசிக்கும் நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அனுப்புநா் சோ.ராமசாமி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பட்டினப்பாக்கம் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் நடிகா் எஸ்.வி.சேகரின் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீஸாா், சைபா் குற்றப்பிரிவு உதவியுடன் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

SCROLL FOR NEXT