நயினாா் நாகேந்திரன் கோப்புப் படம்
தமிழ்நாடு

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் 140 கோடி பேருக்கும் தீபாவளி பரிசு விரைவில் காத்திருக்கிறது என்றாா். அந்த தீபாவளி பரிசுதான் ஜிஎஸ்டி வரி குறைப்பு. இது திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமலாகிறது.

ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும். மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும். 350-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைகிறது.

இதனால் பொதுமக்களின் செலவு கணிசமாக குறையும். 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரி விகிதங்கள் நீக்கப்பட்டு 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு அடுக்குகள் வரிவிகிதங்கள் மட்டுமே உள்ளன. இதனால், வா்த்தகா்கள், சேவை அமைப்புகள் பயன்பெறுவாா்கள்.

வாகனங்கள், மின்னணு சாதனங்களின் விலை குறையும். தனிப்பட்ட வாழ்நாள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான 18 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் காப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாா்கள்.

பெரும்பாலான உயிா் காக்கும் மருந்துகளின் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் மருத்துவச் செலவு குறையும். வரி சீா்திருத்தத்தால் பொருளாதாரம் உச்சம் தொடும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

SCROLL FOR NEXT