முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவே கரூர் விரைகிறார்.

தினமணி செய்திச் சேவை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவே கரூர் விரைகிறார்.

விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியான நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் இன்று இரவே தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.

இதனிடையே துபை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பி நாளை காலை கரூர் செல்கிறார். அவர் சனிக்கிழமை இரவே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது.

கரூர் நெரிசல் பலி: குடியரசு தலைவர் இரங்கல்!

இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 38 பேர் பலியானதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

CM Stalin rushing to Karur tonight after more than 30 people dead in a stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்மிக சுற்றுலா: 64 பக்தா்கள் பங்கேற்பு

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை

SCROLL FOR NEXT