அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும், பொறுத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ்.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,
"திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை செல்கிறேன். திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவே ஈரோடு திரும்புகிறேன்.
நாளை எனது சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறேன்" என்றார்.
'அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது? அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறுகிறார்களே?' என்ற கேள்விக்கு,
"பொறுத்திருக்க வேண்டும் , நல்லதே நடக்கும்" என பதிலளித்தார்.
அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.