முகப்பு
தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு!

சிகிச்சையளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன...

Updated On : 27 செப்டம்பர், 2025 at 4:15 PM
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்
பகிர்:

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 31 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 31 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 58-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சையளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சியிலிருந்து 24 மருத்துவர்களும், சேலத்திலிருந்து 20 மருத்துவர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

Karur stampede: Additional doctors called to Karur Government Hospital

முழு கட்டுரையைப் படிக்க →