தமிழ்நாடு

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பவன் கல்யாண் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனை தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 38 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கோரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அஞ்சப்படுகிறது. பலியானோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், “தமிழகத்தின் கரூரில் நடிகரும், தமிழக வெற்றி கழகம் தலைவருமான விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Karur stampede death incident is unfortunate! - Pawan Kalyan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் அகழாய்வுகள் தொடா்ந்தால் தமிழா்களின் தொன்மை மேலும் தெரியவரும்: அமா்நாத் ராமகிருஷ்ணன்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

செப். 30-இல் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்! 5 நகரங்களில் 31 ஆட்டங்கள்

SCROLL FOR NEXT