தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது கரூர் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, விஜய் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு முதல் காவல் துறை பாதுகாப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் அனைவரையும் விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டைச் சுற்றிலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாநகர காவல் துறையினரிடம் இணைந்து 5 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, விஜய் வீட்டுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.