முகப்பு
தங்கம் விலை உயர்வு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.

Updated On : 29 செப்டம்பர், 2025 at 11:58 AM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(செப்,29) காலை, ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனையானது.

தற்போது, தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 86,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள், வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தில் வெள்ளி

இந்த மாத தொடக்கத்தில் (செப். 1) வெள்ளி விலை கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.60 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

summary

The price of gold jewelry in Chennai has increased by Rs. 1,140 per sovereign in a single day.

முழு கட்டுரையைப் படிக்க →