கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் கோவை விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 100 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு முன் கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்த நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 26 ஆம் தேதி மற்றும் அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 27 ஆம் தேதி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேநாள் பிற்பகல் கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று கோவை விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் வரும் ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் காவல் துறையினர் விரைந்து சென்று அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்துகின்றனர்.
இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 1,000 இ-மெயில் ஐ.டி.களை கண்டுபிடித்து உள்ள சைபர் கிரைம் போலீசார், பின்னணியில் உள்ள நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி காவல் துறையினர் கூறும்போது போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் நடப்பாண்டில் 24 முறை வந்து உள்ளதாகவும் கடந்தாண்டு இது 23 ஆக இருந்தது எனவும் இத்தகைய மிரட்டல்கும்பல் டார்க் - வெப் வாயிலாக இ-மெயில்களை அனுப்புகின்றனர்,அதில் அவர்களின் அடையாளங்கள் தெரியாது, இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கிறோம், இதுவரை 1,010 இ-மெயில் ஐ.டி.களில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.