முகப்பு
தமிழ்நாடு

மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பேன்; திமுக தொடர்ந்து 2-ம் முறை ஆட்சியமைக்கும்: உதயநிதி

வேட்புமனு தாக்கல் செய்தபின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:55 AM
உதயநிதி ஸ்டாலின் - X/ udhay
பகிர்:

திமுக தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியமைத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) காலை வேட்புமனு தாக்கல் செய்தார். திருவல்லிக்கேணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி, "கடந்த 5 ஆண்டுகள் என்னுடைய தொகுதிக்கு எவ்வளவு முடியுமோ செய்திருக்கிறேன். இன்று மாலை என்னுடைய தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து மீண்டும் ஒரு வாய்ப்பு தருமாறு கேட்கவிருக்கிறேன். மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திமுக தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியமைத்து புதிய வரலாற்றை உருவாக்கும். 2026 தேர்தல் வெற்றி வரலாற்று வெற்றியாக இருக்கும். கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெற்று 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார்" என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சென்னை சேப்பாக்கம் தொகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட அவரது பேரன் 48 வயதான உதயநிதி ஸ்டாலின், 93,285 வாக்குகள் (68.9 சதவிகிதம்) பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் கசாலியை சுமார் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், அதன் பின்னர் அமைச்சர், துணை முதல்வரானார். தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் உதயநிதிக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் டி. செல்வம் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

summary

DMK will form the government for a second consecutive term: Udhayanidhi stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.