முகப்பு
தமிழ்நாடு

நாளை தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி : பிரசாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா?

தமிழகத்துக்கு சனிக்கிழமை (ஏப்.18) வரவுள்ளாா். அவா் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:06 AM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:55 PM

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தமிழகத்துக்கு சனிக்கிழமை (ஏப்.18) வரவுள்ளாா். அவா் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

சென்னை வரும் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கா், துறையூா் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கவுள்ளாா். மீண்டும் ஏப்.20-ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, குளச்சல், ஸ்ரீவைகுண்டம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, மேலூா் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளாா். காா்கே பங்கேற்பு: இந்தக் கூட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் பங்கேற்று பிரசாரம் செய்யவுள்ளாா்.

ராகுல் காந்தி பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புதுச்சேரி பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு அண்மையில் ராகுல் காந்தி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வந்திருந்த போதும், ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்யவில்லை.

Advertisement

இந்த நிலையில், வரும் 20-ஆம் தேதி தென்மாவட்டங்களுக்கு வரவுள்ள ராகுல் காந்தியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களை ஒரே மேடையில் ஏற்றி பிரசாரம் மேற்கொள்ளச் செய்வதற்கான முயற்சியில் திமுக-காங்கிரஸ் கட்சிகளின் தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா்.