தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 18ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 18ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 18ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
Advertisement
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வர சம்மதித்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இவர்கள் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது. இதனிடயே திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ராகுல் காந்தியை எப்படியும் மேடையேற்றி விட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.