முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தல்! நகரங்களை சமநிலை செய்த கிராமங்கள்!

தமிழ்நாடு தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் நகரங்களை சமநிலை செய்துள்ளன கிராமங்கள்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:31 PM
பெண் வாக்காளர்கள். - DPS
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் பதிவான வாக்குகளின் சதவிகிதம்தான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது.

வழக்கமாக வாக்குப்பதிவுக்கு விடுமுறை கொடுத்தால், சுற்றுலா சென்றுவிடும் மக்கள், இந்த முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் காரணமாக, பாடுபட்டு பட்டியலில் பெயர் சேர்த்திருப்பதாலும், எஸ்ஐஆர் முறையால் வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததாலும் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறதே தவிர, வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை வழக்கம்போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, நகரப் பகுதிகளில் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டுவது போல கிராமப் பகுதிகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும், போக்குவரத்து வசதியின்மை, முதியவர்கள் அதிகம் இருப்பது போன்றவையும் கிராமங்களில் வாக்குப்பதிவு குறையக் காரணங்களாக இருக்கும்.

Advertisement

ஆனால், 2026 தேர்தலில் நகரங்களை கிராமங்கள் சமநிலை செய்திருப்பதாகவேக் கூறப்படுகிறது. சென்னையைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

summary

Villages have equaled cities in voting percentage in the Tamil Nadu elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.