முகப்பு
தமிழ்நாடு

தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்!

தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படவுள்ளது தொடர்பாக...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 2:20 PM
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:59 PM

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை(பிப். 5) முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை பிப்.12 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 2:12 PM

இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

Advertisement

விரைவில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை பிப். 6 முதல் பிப். 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப். 12 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The DMDK will begin distributing application forms tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.