முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி...

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:21 PM
சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும் அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவையும் கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுகவைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

summary

DMK and alliance parties protest against union bjp govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.