முகப்பு
தமிழ்நாடு

தோல்வி பயத்தில் ஸ்டாலின் என்னவெல்லாம் செய்கிறார் பார்த்தீர்களா? இபிஎஸ் விமர்சனம்

ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டதை இபிஎஸ் விமர்சித்திருப்பது பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:21 AM
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

மகளிரின் உரிமைத் தொகை கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான தொகை ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 இன்று காலை மகளிர் உரிமைத் தொகை கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

மேலும், திமுக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Advertisement

இதனை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா ஸ்டாலின் அவர்களே?

சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "பேட்ச்வொர்க் (Patchwork)" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை ’விடியே ஆட்சி வீட்டு பில்லே சாட்சி’ என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...

யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Opposition Leader Edappadi Palaniswami has criticized the fact that Rs. 5,000 has been credited to the women's entitlement account.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments