முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

Updated On : 29 மார்ச், 2026 at 1:26 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - எக்ஸ்
பகிர்:

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இனி ரூ. 1500 வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுமுன்பு மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

மக்களின் கோரிக்கைகளை கேட்டு இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தயாரித்த துணை பொதுச்செயலாளர் கனிமொழி, டி.கே. எஸ். இளங்கோவன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்

  • 1 - 5 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

  • மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

  • சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

  • முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.

  • மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க பிணையின்றி ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

  • பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்.

  • டயாலிசிஸ் வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்

  • அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்படும்.

  • முதியோர் உதவித் தொகை ரூ. 1200-லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,5000 ஆக உயர்த்தப்படும்.

  • திருச்சி, மதுரை, கோவையில் புதிய துணை நகரங்கள்.

  • அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 பேருந்துகள்.

  • பொள்ளாச்சியில் மொழிப்போராட்ட காட்சிக் கூடம் அமைக்கப்படும்

  • 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

  • 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 ஆக உயர்த்தப்படும்.

summary

Tn Election 2025 Women's Entitlement Allowance of ₹2,000: DMK Election Promises!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.