தவெக தலைவர் விஜய் DPS
தமிழ்நாடு

சேலத்தில் என்னப் பேசுவார் விஜய்? அதிமுகவைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா?

சேலத்தில் அதிமுகவைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், சேலத்தில் அவர் என்னப் பேசுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இதுவரை தமிழகத்தில் ஆளும் திமுக, மத்தியில் ஆளும் பாஜக குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கும் விஜய் அதிமுக குறித்து பெரிய அளவில் விமர்சித்ததில்லை.

ஆனால், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில், கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார்? அதிமுக பற்றி விஜய் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருக்கிறார்கள். கூட்டத்துக்கு விஜய் சரியாக 12.30 மணிக்குள் வருகை தந்துள்ளார். அவரை நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஓமலூர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் வந்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.

கூட்டத்துக்கு, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே விஜயைக் காண காத்திருந்தனர்.

மொத்தமாகவே 5 ஆயிரத்துக்குள்தான் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவத க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 வரவு அதிமுகவுக்கு அழுத்தமா? தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | DMK | BJP | MKStalin

”எதுக்கு திடீர் ரூ. 5000! ஆனா ஓட்டு தளபதிக்குதான்!” தவெக தொண்டர்கள் ஆவேசம்!

அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி! - கனிமொழி

ஒரே நாளில் 9,801 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர்!

குரங்குகளுக்கு காதணி அணிவித்த கோதண்டராமர்

SCROLL FOR NEXT