முகப்பு
தமிழ்நாடு

அவதூறு பேச்சு வழக்கு: திமுக பேச்சாளருக்கு சிறை

ஆளுநர் ரவி, பாஜக நிர்வாகி குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Updated On : 14 பிப்ரவரி 2026, 5:35 pm IST
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
பகிர்:

ஆளுநர் ரவி, பாஜக நிர்வாகி குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2023-ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் 10-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Advertisement

summary

DMK spokesperson Sivaji Krishnamurthy has been sentenced to 2 years for making obscene remarks about the Governor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.