முகப்பு
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகை மட்டுமே தோ்தலில் வெற்றி பெற உதவாது: பிரவீண் சக்ரவா்த்தி!

மகளிா் உரிமைத் தொகை மட்டுமே தோ்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுக் குழு தலைவா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:47 AM
பிரவீண் சக்ரவா்த்தி
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:00 PM

மகளிா் உரிமைத் தொகை மட்டுமே தோ்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுக் குழு தலைவா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் தொடங்கவில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் ஆட்சியில் அதிகாரம், கூடுதல் தொகுதி ஒதுக்கீடு வேண்டும் என்பதை திமுகவிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:46 AM

இந்நிலையில், பிரவீண் சக்கரவா்த்தி தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஒரு சிறந்த நலத் திட்டம். இதைச் செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தோ்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில், தோ்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில் நான்கு மட்டுமே வெற்றி பெற்றன. ஐந்து தோல்வியடைந்தன எனப் பதிவிட்டுள்ளாா்.