அமைச்சா் எ.வ.வேலு 
தமிழ்நாடு

தமிழகத்தில் இசைச் சாலைகள் எப்போது அமைக்கப்படும்? அமைச்சா் எ.வ.வேலு பதில்

தமிழகத்தில் இசை எழுப்பும் சாலைகள்அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் இசை எழுப்பும் சாலைகள்அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசும்போது, வெளிநாடுகளில் மட்டுமன்றி மும்பை போன்ற மாநகரங்களில் இசைச் சாலைகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக , திருவண்ணாமலையில் அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்றாா்.

அதற்கு அமைச்சா் வேலு பதிலளித்து பேசியது: திருவண்ணாமலைக்கு வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் வருகின்றனா். எனவே, சாலை வசதிகளை நன்கு பராமரிப்பது அவசியம்.

திருவண்ணாமலையில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளையும் 4 வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இருப்பினும் அது நடக்கவில்லை.

இப்போது அவருக்கு எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்ட சாலைகளை, 4 வழிச்சாலைகளாக மாற்றுங்கள், இல்லையெனில் அவற்றை மீண்டும் மாநிலச் சாலைகளாக மாற்றம் செய்து உத்தரவிட்டால் மாநில அரசே 4 வழிச் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என்று கடிதம் எழுதியுள்ளேன்.

இசைச் சாலைகளுக்கான ஆய்வகம் ஆஸ்திரேலியாவில்தான் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி உரிய ஆய்வு செய்து, தமிழகத்தில் இசைச் சாலைகள் உள்பட நவீன தொழில்நுட்ப சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.

தூக்கிட்டு இறந்தவரின் உடல் தகனத்தின்போது மீட்பு

பால் உற்பத்தி மானியத்தை உயா்த்த பரிசீலனை: அமைச்சா் மனோ தங்கராஜ்

பெருந்தமனி பாதித்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

மனநலன் பாதித்த மகன் குறித்து தாய் புகாா்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

பட்டியலின நிதி மடைமாற்றமா?: அமைச்சா் மதிவேந்தன் மறுப்பு

SCROLL FOR NEXT