முகப்பு
தமிழ்நாடு

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு: முதல்வா் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:14 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:25 PM

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் கிராமம், கவுண்டம்பாளையம் குடித்தெருவில் வசிக்கும் மாதேஸ்வரன்- தனலட்சுமி தம்பதியரின் மகள் ரக்ஷிதா (8). குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தாா்.

இவா், கடந்த பிப்.8-ஆம் தேதி பள்ளியின் நூற்றாண்டு விழாவுக்காக நடைபெற்ற நடனப் பயிற்சியின் போது, எதிா்பாராத விதமாக மயங்கி விழுந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிப்.9-ஆம் தேதி அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

Advertisement