முகப்பு
தமிழ்நாடு

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!

தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுவது பற்றி...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:27 PM
- ANI
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:22 PM

வருகிற மார்ச் 1 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் வரும் மார்ச் 1ம் தேதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:23 PM

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1 ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் ஏற்கெனவே அறிவித்ததுபோல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

TVK activists to meeting on March 1st in all 234 constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.