மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பெரியார் புகைப்படம்!
மதுரை என்டிஏ மாநாட்டில் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பற்றி....
மதுரையில் நாளை(மார்ச் 1) நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று(பிப். 28) இரவு சென்னை வரவுள்ளார்.
நாளை(மார்ச் 1) காலை புதுச்சேரி செல்லும் அவர், மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் அவர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இதன்பின்னர் மதுரையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்டிஏ மாநாட்டில் பங்கேற்கிறார்.
என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டுக்கான அலங்கார வளைவில் பெரியார் மற்றும் அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.