2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"எங்களுடைய நிர்வாகிகள், தொண்டர்களை ஆலோசித்து கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. பாஜகவிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் மாநாட்டுக்கான பணிகளைத்தான் தற்போது செய்து வருகிறோம்.
அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு என்பதும் சேர்க்கப்பட வேண்டும். இதுகுறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
2026ல் தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வரும். இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 தேர்தல் இருக்கும். நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பு இருக்கிறது. மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.