அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(ஜன. 1) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
Advertisement
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.