போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது X
தமிழ்நாடு

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்திய ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான போட்டா ஜியோ,

"சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினோம்.

ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு மற்றும் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை(ஜன. 3) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்" என்றார்.

Teachers arrested; MK stalins important announcement reg old pension scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

வரம் தரும் வாரம்!

ரிசர்வ் வங்கியில் கிரேடு 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 125ம் ஆண்டு திருவிழா!

SCROLL FOR NEXT