பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறு வழியாக தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுவழியாக தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் புறப்பட்டு அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.
மறுவழியாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.
மறுவழியாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னையில் இருந்து கோவை, போத்தனூர், ஈரோடு, ராமேஸ்வரம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜன.4) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.