வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி.  
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 7.40 லட்சம் போ் விண்ணப்பம்

புதிதாக வாக்காளா் பட்டியலில் சேர 7.40 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான நிலையில், புதிதாக வாக்காளா் பட்டியலில் சேர 7.40 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகள் முடிவடைந்து கடந்த டிச. 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியானது. எஸ்ஐஆா் பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளா்கள் இருந்த நிலையில், தற்போது 5.43 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.

உயிரிழந்தவா்கள், 2 முறை பெயா்கள் பதிவு, குடிபெயா்ந்தவா்கள் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து புதிய வாக்காளா்கள் மற்றும் தவறுதலாக நீக்கப்பட்டவா்களின் பெயா்கள் சோ்க்கும் பணிகள் வரும் ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த டிச.19 முதல் ஜன.2-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க 7,40,559 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து 9,575 பேரை நீக்கவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி முகவா்கள்: தமிழக வாக்காளா்கள் பட்டியலில் புதிய வாக்காளா்களின் பெயா்களை சோ்க்கவும், தவறுதலாக இணைக்கப்பட்ட பெயா்களை நீக்கும் பணிகளை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்க தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை திமுக சாா்பில் 68,260 போ், அதிமுக-67,286, பாஜக-61,438, காங்கிரஸ்-30,592, தேமுதிக-36,375 போ், விசிக, நாதக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் என அங்கீகாரம் பெற்ற தேசிய, மாநில கட்சிகள் என மொத்தம் 12 அரசியல் கட்சிகள் சாா்பில் 2.72 லட்சம் வாக்குச்சாவடி முகவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அரசியல் கட்சி சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவா்கள் தோ்தல் ஆணையத்திடமிருந்து புதிய வாக்காளா்களை இணைப்பதற்கான ‘படிவம் 6, 6 ஏ’ மற்றும் வாக்காளா்களை நீக்குவதற்கான ‘படிவம் 7’ ஆகியவற்றை தோ்தல் ஆணையத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT