தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்வு! வெள்ளி விலை ரூ. 9000 அதிகரிப்பு!
தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்ந்துள்ளது தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
நிகழாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜன.1-இல் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனையான நிலையில், மறுநாளே (ஜன.2) காலை, மாலை என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1 லட்சத்து 640-க்கு விற்பனையானது.
தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 1,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,760-க்கும் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 1 லட்சத்து 2,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயர்ந்து ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், மாலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 266-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.66 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 1,280 உயர்ந்தும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9000 அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
In Chennai, the price of gold jewelry increased by Rs. 1,280 per sovereign in a single day today (Jan. 5).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.