வாகனங்கள்.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: சென்னையில் ஜன. 19 வரை கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றம்!

பொங்கல் பண்டிகையொட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கனரக வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்களை தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பண்டிகையொட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கனரக வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்களை தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பவும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம், நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தாம்பரம் மாநகர காவல்துறை, ஜனவரி (12,13,14,18 மற்றும் 19) ஆகிய தேதிகளில், பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.

கனரக வாகனங்களுக்கானத் தடை:

ஜி.எஸ்.டி சாலை, பம்மல்-குன்றத்தூர் சாலை, திருநீர்மலை சாலை, 200 அடி ரேடியல் சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை, காந்தி ரோடு மற்றும் முடிச்சூர் சாலைகளில், மதியம் 02.00 முதல் அதிகாலை 02.00 வரை, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம்:

வண்டலூர், கேளம்பாக்கம் சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கிரஷர் சந்திப்பை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், கீரப்பாக்கம் வழியாக காரணைப்புதுச்சேரி நோக்கியும் அல்லது வெங்கம்பாக்கம் வழியாக மப்பேடு நோக்கியும் திருப்பி விடப்படும்.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை விவரங்கள்

புறப்படும் இடம்

• குன்றத்தூர் வெளிவட்டச் சாலையிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

• காஞ்சிபுரம் மற்றும் ஒரகடத்திலிருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

• மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

• வெளிவட்டச் சாலையிலிருந்து (ORR) தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

• ECR-லிருந்து வரும் கனரக வாகனங்கள்.

• OMR-லிருந்து வரும் கனரக வாகனங்கள்.

• செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

மாற்றுப் பாதை விவரம்

• மாதா பொறியியல் கல்லூரி சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

• முடிச்சூர் சாலை - வெளிவட்டச் சாலை சந்திப்பில் (ORR) திருப்பி விடப்பட்டு - வெளிவட்டச் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

• மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மேலே திருப்பி விடப்பட்டு - பூந்தமல்லி வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

• மண்ணிவாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு - ஒரகடம் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

• கோவளம் சந்திப்பில் திருப்போரூர் வழியாக திருப்பி விடப்படும்.

• படூர் சந்திப்பு வழியாக மற்றும் செங்கன்மால் சந்திப்பின் வழியாக மகாபலிபுரம் நோக்கி திருப்பி விடப்படும்.

• சிங்கபெருமாள் கோவில் வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிவட்டச் சாலை (Outer Ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய மேம்பாலம் வழியாக வாலாஜாபாத் சாலை நோக்கியும் திருப்பி விடப்படும்.

நெரிசலற்ற பயணத்திற்காக, வாகன ஓட்டிகள் தங்களின் இருவழிப் பயணங்களுக்கும், OMR மற்றும் ECR வழித்தடங்களைப், பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tambaram City Police have announced alternative routes for heavy vehicles to reduce traffic congestion during the Pongal festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானை டிரம்ப் வழிநடத்தட்டும்: கமேனி

டி20 உலகக் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு சிறிது அதிர்ஷ்டம் வேண்டும்: ஜாக் காலிஸ்

சாமை சர்க்கரைப் பொங்கல்

ஒ ரோமியோ டீசர்!

கடும் குளிர்: நொய்டாவில் ஜனவரி 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT