புனித அந்தோனியார் ஆலயம் 
தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா: ஜன. 15 முதல் விண்ணப்பம் விநியோகம்

கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15 - 25 வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15 - 25 வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

5 - 70 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என்றும் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் விண்ணப்பம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா வருகிற 2026, பிப். 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து ஜெபமாலை, இருநாட்டு மக்களும் பங்கேற்கும் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அன்று இரவு புனித அந்தோணியாா் சொரூபத்துடன் தோ் பவனி நடைபெறுகிறது. மறுநாள் 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெறுகின்றன.

பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும், இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.

Applications for those participating in the Katchatheevu Festival from India are being distributed from January 15th - 25th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு முயற்சியால் சிக்னல் கேபிள்கள் சேதம்! தில்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைகிறது: டிஎம்ஆா்சி

தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த வடமாநில முதியவா் சடலம் எரிப்பு

கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்

‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நிறுத்தம் இல்லை’

SCROLL FOR NEXT